காதலியின் ஒப்புதலோடு அந்த உறவில் ஈடுபட்டால் பாலியல் குற்றமாகாது - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


இளம் ஆண், பெண் இடையே முழு ஒப்புதலோடும், புரிதலுடனும் உடலுறவில் ஈடுபட்டால் பாலியல் குற்றமாகாது என்று மேகாலயா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். அவர் பள்ளியில் அடிக்கடி காணாமல் போனதை அடுத்து ஆசிரியர் சிறுமியின் தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தாய் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி காதலனுடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காதலனை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து காதலன் அளித்த வாக்குமூலத்தில் சிறுமியின் சம்மதத்துடன் உடல் ரீதியான உறவுகள் இருந்ததாகவும், தனது சொந்த விருப்பத்திற்கு உட்பட்டு தான் உடலுறவு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இதனை விசாரித்த நீதிமன்றம் இதுபோன்ற சூழ்நிலைகளில் காதலனும், காதலியும் முழு ஒப்புதலோடும், புரிதலோடும் பாலியல் உறவில் ஈடுபடும் போது போக்சோ சட்டத்தை செயல்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sex is not a crime if you engage in the relationship Meghalaya court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->