கணவன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் பாலியல் வன்கொடுமை தான் - கர்நாடக உயர்நீதி மன்றம்..! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது வன்கொடுமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் ஒருவர் தனது கணவன் தன்னை பாலியல் அடிமையாக நடத்துவதாகவும் கட்டாய உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட வருவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டது இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது .இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவர் மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய மறுத்தது.

இதனையடுத்து நீதிபதி நாக பிரசன்னா தெரிவிக்கையில் ஒரு ஆண் என்பவன் ஆண்தான், ஒரு செயல் என்பது செயல்தான், பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். கணவனாக இருந்தாலும் பெண் மீது பாலியல் வன்கொடுமை செய்தால் அது பாலியல் வன்கொடுமை தான் என தெரிவித்தார்.

மேலும் கணவனாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் திருமண அமைப்பு பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட எந்தவிதமான சிறப்பு சலுகையும் உரிமையும் வழங்கவில்லை என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual abuse is when the husband has forced sex


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->