கேரளா: மாணவர் தலைவர் தேர்தலில் மோதல்.. எஸ். எஃப். ஐ மாணவர் கொலை..! - Seithipunal
Seithipunal


கல்லூரியில் ஏற்பட்ட மோதலில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவன் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளமாநிலம், இடுக்கியில் அரசு பொறியில் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த எஸ்.எப்.ஐ. அமைப்பினருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

அப்போது, இரு மாணவர் அமைப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராற்றில் எஸ். எப் . ஐ மாணவர் அமைப்பை சேர்ந்த தீரஜ், அபிஷித், அமல் ஆகியோருக்கு கத்திகுத்து விழுந்தது. உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீரஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காங்கிரஸ் இளைஞரணி பிரமுகரை கைது செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்துக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SFI activist stabbed to death in Idukki


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->