மல்லிகார்ஜுன கார்கே வெற்றி.. காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு., ஆணையருக்கு பறந்த கடிதம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற இந்த தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருவரும் நேரடியாக போட்டியிட்டனர்.

இந்த தேர்தலின் வாக்குப்பதிவு 17ஆம் தேதி நடந்த நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகிறார். ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாருமே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 

இத்தகைய சூழலில், மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவராக தேர்வாகி இருக்கின்ற நிலையில் சசி தரூர் ஆதரவாளர் ஒருவர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். 

சசிதரூர் ஆதரவாளரான சல்மான் சோஸ் தேர்தல் ஆணையர் மதுசூதன மிஸ்ரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உத்தரபிரதேச தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. வாக்கு பெட்டிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முத்திரை இருந்தது. எனவே, உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்த வாக்குகளை ரத்து செய்ய வேண்டும்  இது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shashi tharoor supporter Said that Congress leader election of uttar Pradesh voting issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->