அரசு நிகழ்ச்சியில் தரையில் அமர்ந்த பழங்குடி மக்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தியில் பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த விழா, காணொலி காட்சி மூலம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவுக்கு வந்த பழங்குடியின மக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், அவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டனர். இதை பார்த்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.

உடனே அங்கிருந்த அதிகாரிகள் நாற்காலிகளைக் கொண்டு வந்து அங்கு போட்டு அவர்களை அமரும்படி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விழா ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

பழங்குடியின மக்களை கவுரவிப்பதற்கும், புதுச்சேரி அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்குவதற்கும், அவர்களைப் பாராட்டுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அவர்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sheduled peoples sit under ground in govt function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->