அதிர்ச்சி!...டெல்லியை தொடர்ந்து மும்பையில் அடர் பனி, சுவாசக் கோளாறு! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த 4 நாட்களாக காற்று மாசு மிக மோசமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு 428 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்றும் காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. டெல்லி ரயில்வே நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பனி படர்ந்து காணப்பட்டது.

இதே போல், லோதி சாலை, ஷாதிப்பூர், வாஜிப்பூர், பஞ்சாபி பாக், ஆர்.கே. புரம், ஆனந்த் விகார் உள்ளிட்ட பகுதிகளில் காற்று தர குறியீடு கடுமையான அளவில் உள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் காற்று தர குறியீடு 179 என்ற மித அளவில் உள்ளபோதிலும், நுரையீரல், இருதய பாதிப்பு உள்ள மக்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், மும்பையின் பல்வேறு பகுதிகளில் பனி படர்ந்து காணப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock deep snow in mumbai after delhi breathing problem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->