காவிரி விவகாரம் | கர்நாடக குழுவுடன் நாளை டெல்லி செல்லும் சித்து! பெரிய தலையை சந்திக்க திட்டம்!
Siddaramaiah is going to meet PMModi regarding Cauvery issue
கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு இரண்டாம் கட்டமாக 15 நாட்களுக்கு வினாடி 5000 கன அடி வீதம் நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த விட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர் குழு டெல்லியில் சென்று மத்திய நீர்வரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர். தமிழக எம்பிக்கள் இன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சந்தித்துள்ள நிலையில் நாளை கர்நாடக மாநில அனைத்து கட்சி எம்பிக்களும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Siddaramaiah is going to meet PMModi regarding Cauvery issue