சிரியா || வெடிகுண்டு விபத்தில் சிக்கி 6 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சிரியா || வெடிகுண்டு விபத்தில் சிக்கி 6 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடான சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த அமைப்பை போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிப்பதற்கு சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அவ்வப்போது வான்வெளி தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதேசமயம் சிரியாவில் பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சிரியா நாட்டிலுள்ள டமாஸ்கஸ் பகுதியில் கார் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனத்தின் மீது வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 

மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died and 20 more than peoples injured bomb explosion in syria


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->