சோகம் - மஹாராஷ்டிராவில் ரெயில் மோதி 8 பேர் பலி.!
six peoples died for train accident in maharastra
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் மோதியதில் தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்ற ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கோன் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
உடனடியாக இறங்கி தண்டவாளத்தை கடக்க வேகமாக ஓடினர். அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு ரயில் இவர்கள் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ரெயில் மோதி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples died for train accident in maharastra