நிலச்சரிவு - வங்காள தேசத்தில் 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


வங்காளதேச நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

இதேபோல், கடந்த வியக்கிழமை டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் ஒரு ரோஹிங்கியா குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மலைகளின் சரிவுகளில் வாழ்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், நிலச்சரிவு முகாமில் குறைந்தது மூன்று குடிசைகளையும் அழித்தது. இருப்பினும், ஆபத்தான சரிவுகளில் இன்னும் வசிப்பவர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died in bangaladesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->