சபரிமலையில் சின்னம்மை பரவல் காரணமாக மாஸ்க் அணிவது கட்டாயம்!
Smallpox spreading in Sabarimala and wearing a mask is mandatory
சபரிமலையில் தற்போது மழை பெய்வது குறைந்து நல்ல வெயில் அடிக்கும் நிலையில் சின்னம்மை நோய் பரவல் அதிகாரித்துள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐந்து போலீசருக்கு சின்னம்மை நோய்உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் விடுதி அமைந்துள்ள பகுதிகளில் கிரிமினார் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதேபோன்று சின்னம்மை பாதிக்கப்பட்ட போலீசார்ருடன் தங்கி இருந்த 12 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். சின்னம்மை நோய் பரவாமல் இருக்க எல்லா போலீசாரும் கட்டாயம் மாஸ் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று சபரிமலைக்கு வரும் பக்தர்கள் முடிந்த அளவிற்கு மாஸ் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து நிலக்கல் செல்லும் கேரள அரசு பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் உள்ளது. இதன் காரணமாக பஸ் புறப்பட்ட பின் டிக்கெட் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பம்பை மணல் பரப்பில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே பக்தர்கள் இந்த கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிய பின்பு பம்பை பெரிய பாலம் வழியாகச் சென்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் முன் நிலக்கல் பஸ்ஸில் ஏறி பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Smallpox spreading in Sabarimala and wearing a mask is mandatory