உ.பி அருகே ஓடும் ரயிலில் வந்த புகை - பீதியில் பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நோக்கி உஞ்சாஹர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதன் படி இந்த ரெயில், உத்தரபிரதேசம் மாநிலம் எடாவா ரெயில் நிலையம் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் ஒரு பயணியின் பையில் இருந்து திடீரென புகை வரத் தொடங்கியது.

இதைப்பார்த்து அச்சமடைந்த பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பரூகாபாத் ரெயில் நிலையம் அருகே ரெயிலை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் புகை வந்த பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர். ஆனால், அதற்குள் பெட்டியில் இருந்த சக பயணிகள் தீயணைப்பு சாதனம் மூலம் புகையை அணைத்து விட்டனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், பயணியின் பையில் இருந்த தீப்பெட்டி பாக்கெட்டுகள் உரசிக்கொண்டதால் புகை வந்தது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக ரெயிலில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

smoke come from running train in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->