இந்திய கடலுக்குள் வழி தவறிய இலங்கை படகு - திருப்பி ஒப்படைத்த இந்திய காவல் படையினர்..! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 'தகோஷி' என்ற மீன்பிடி படகில் வழி தவறி நுழைந்து விட்டனர்.

இவர்களை கண்காணித்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து நாகப்பட்டினத்தில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்களின் படகு பழுதாகி இருந்ததால், அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

அதன் பின்னர், படகும் பழுது பார்க்கப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இலங்கை கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுவின் பிரதிநிதிகள் முன்னிலையில், இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையில் உள்ள சர்வதேச எல்லையில் இரண்டு பேரையும், இலங்கை படகையும் இலங்கை கடலோர காவல் படை அதிகாரிகளிடம் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan boat lost way in Indian Ocean


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->