தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள்.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில், இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும் அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட மூன்று பேர், நேற்று அதிகாலை பைபர் படகு மூலம் வந்து இறங்கினர். இதையறிந்த தனுஷ்கோடி மீனவர்கள், மண்டபம் மரைன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

அந்தத் தகவலின் படி அங்கு வந்த மரைன் போலீசார், மூன்று போரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் தமிழர்கள் பகுதியில் வேலை இல்லாமல் அத்தியாவசிய பொருள்களின் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அப்படி கூடுதல் விலை கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காத அவல நிலை உள்ளது.

உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் அங்கு வாழ முடியாத ஒரு அபாயகரமான சூழல் நிலவுவதால் நாங்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டோம்” என்றுத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மூன்று போரையும் முகாமில் தங்க வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilangan tamilans stay in dhanushkodi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->