கல் குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் பலி.. மிசோரம் மாநிலத்தில் சோகம்..! - Seithipunal
Seithipunal



மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் வங்கதேசத்திற்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்த ரெமல் புயல் வங்கதேசம் மற்றும் இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து அங்கு கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மிசோரம் மாநிலத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் இதுவரை 10 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் அங்கு சிக்கியுள்ள பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் அங்கு கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் மீட்பு பணிகள் தாமதமாகிறது.

இதையடுத்து மிசோரம் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஸ்வால் மாவட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stone Rocks Collapsed and 10 Died in Misoram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->