சென்னையை பதறவைத்த தண்டாயுதபாணி! அடப்பாவி.. இதெற்கெல்லாமா ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்ப!
Chennai Train Bomb thread
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தண்டாயுதபாணி என்பவர், முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணித்தபோதும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் சென்று உறங்க முயன்றார்.
அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், சக பயணிகள் அவரை தூங்கவிடாமல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த அவர், ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார்.
உடனே போலீசார் விசாரணை மேற்கொண்டு, ரயிலை பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் கவனித்தனர். சோதனைக்குப் பிறகு, தண்டாயுதபாணி போதையில் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Chennai Train Bomb thread