'தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே வரும் போது, நல்லி எழும்பு சாப்பிடுகிற எங்களுக்கு வராதா?' நிர்மலா சீதாராமனை விமர்சித்த வேல்முருகன்..!
Velmurugan criticized Nirmala Sitharaman
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு ஒரேயொரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
அது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் என பேசினார்.

அத்துடன் அவர், 'இதை சரியான களமாக மாற்றுங்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம். அனைத்து சுங்கச்சாவடிகளில் உங்க தலைமையிலான தொண்டர்களும், மக்களும் வரிக்கொடா இயக்கத்தை அறிவியுங்கள். அனைத்து தலைவர்கள் சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடிகளில் சுங்கம் தர மறுப்போம் என வரிக்கொடா இயக்கத்தை தொடங்குவார்கள்' என்று குறிப்பிட்டார்.
மேலும், '2-வது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள். அதானியின் துறைமுகங்களுக்கு துணை நிற்கமாட்மோம் என சொல்லுங்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரமாட்டோம். எனச் சொல்லுங்கள். மோடி உங்களுடைய காலடியில் மண்டியிடுகிறாரா? இல்லையா? என்பதை நான் பார்க்கிறேன் என்பதுதான்' என விமர்சித்தார்.

அத்துடன் அவர் பேசுகையில்; தமிழனின் மான உணர்ச்சி, இன உணர்ச்சி, சுயமரியாதையில், தன்மானத்தில் கை வைத்துக்கொண்டே இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்பதால் எவ்வளவோ பணிந்து போகிறீர்கள். எவ்வளவோ தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறோம். ஒன்றிற்கும் மரியாதை கிடையாது. கிழித்து குப்பையில் வீசுகிறார்கள்.
பாரளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள்., மோடி அரசு, சங்கபரிவார் கும்பல்கள் நாட்டிற்கு செய்யும் அட்டூழியங்களை பாராளுமன்றத்தில் கிழித்து தொங்கவிடுகிறார்கள்' என சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து, தமிழக வரலாற்றிலேயே கலைஞருக்குப் பிறகு தளபதி தலைமையில் உள்ள 40 எம்.பி.க்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கக் கூடியவர்கள். நம்ம ஆட்கள் கேட்கும் கேள்விகள் ஒன்றிற்கு கூட சங்கி கும்பலால் பதில் சொல்ல முடியவில்லை. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். அவருக்கு கோபம்தான் வருகிறது. தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே கோபம் வருகிறது என்றால்?, நல்லி எழும்பு சாம்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?.' என்றும் விமர்சித்தார்.
அத்துடன் அவர், 'என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை... தானே புயல் வந்தால், பணம் இல்லை. இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் பணம் இல்லை... குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர் கேட்டால், 6 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டருக்கு கண் தெரியாது என்றகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் என்னத்திற்கு ஹெலிகாப்டர்.
நான் அதிகமாக பேசினா.. தளபதி சட்டமன்றத்தில் அழைத்து ஏன் இப்படி பேசினிங்க என கேட்பார்..அதனால் ஆத்திரம் பொங்குது... என்று கடும் விமரணத்துடன் வேல்முருகன் அவர்கள் பேசினார்.
English Summary
Velmurugan criticized Nirmala Sitharaman