நாயை கவ்விச் சென்ற சிறுத்தை...பொதுமக்கள் அதிர்ச்சி!
The dog that snatched the dog... The public is shocked!
தர்மபுரி மாவட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை நாயை கவ்விச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுத்தையை பொறி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை கால்நடைகளை கவ்வி செல்வது தொடர்கதையாகி வருகிறது,அதுமட்டுமல்லாமல் மனிதர்களையும் தாக்கிவிட்டு செல்கிறது.இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை நாயை கவ்விச் சென்றது பொது மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறுத்தை இது வரை 10-க்கும் மேற்பட்ட கோழி சேவல் நாய்களையும் சிறுத்தை வேட்டையாடியதாக தெரியவந்துள்ளவது. மேலும் சிறுத்தையை பிடிக்கும் வரை கால்நடைகளை மேச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிபார்ப்பவர்கள்மனதைபதைபதைக்கச்செய்கிறது.இந்தநிலையில் சிறுத்தையை பொறிவைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
English Summary
The dog that snatched the dog... The public is shocked!