தேர்வில் பாஸ் ஆக வேண்டும், தேர்வு தாளில் 500 ரூபாய் லஞ்சம் வைத்த மாணவன் - தேர்வெழுத ஓராண்டு தடை விதித்த கல்விதுறை..! - Seithipunal
Seithipunal


தேர்வு தாளில் 500 ரூபாய் பணத்தை வைத்த மாணவனுக்கு ஒராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுதேர்வு நடைபெற்றது. இந்த பொதுதேர்வு தேர்வு விடைதாள்களை திருத்தும் பணி நடைபெற்று வந்தது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவன் வேதியியல் மற்றும் இயற்பியல் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நினைத்த மாணவன் 500 ரூபாயை லஞ்சமாகத் தேர்வுத் தாளில் வைத்துத் தந்துள்ளான். 

இதனை கவனித்த அந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அந்த மாணவனிடம் நடத்திய விசாரணையில் தேர்வுத் தாளில் பணம் வைத்தால் பாஸ் ஆக்கிவிடுவார்கள் என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்டு இதனை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து, அந்த மாணவனுக்கு ஒரு வருடம் தேர்வெழுத தடை விதித்துள்ளது.

2 தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மறுதேர்வு எழுத அனுமதித்த நிலையில், அந்த மாணவருக்கு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 21 மாணவர்கள் தேர்வு விதியை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Gave 500 Rupees to Examiner


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->