ராஜஸ்தான் : நீட் தேர்வு பயிற்சிக்கு சென்ற உ.பி மாணவன் தற்கொலை.!
student training for neet exam committed sucide in rajasthan
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் யாதவ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இதையடுத்து அபிஷேக் யாதவ் கடந்த சில நாட்களாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அவர் தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்த விடுதி ஊழியர்கள் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மானாவாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் மாணவர் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனை செய்தனர். அப்போது மாணவர் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அந்த கடிதத்தில், "நான் சிக்கலில் உள்ளேன். படிப்பால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். அதனால் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதியுள்ளார்.
இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோட்டா நகரில் இதுவரைக்கும் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
student training for neet exam committed sucide in rajasthan