அனைத்து தலைவருக்கும் விருந்து அளிக்கும் துணை குடியரசு தலைவர்..! - Seithipunal
Seithipunal


கடந்த இரு மாதங்களுக்கு முன் நாட்டின் துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தங்கார் பொறுப்பேற்று கொண்டார். அவர், நாடாளுமன்றத்தின் அவையில் ராஜ்யசபையின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், துணை குடியரசு தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  துணை ஜனாதிபதி தங்கார் நாளை நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையை சேர்ந்த அனைத்து கட்சி குழு தலைவர்களுக்கும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இரவு விருந்து அளிக்க இருக்கிறார்.

இந்த விருந்திற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. துணை ஜனாதிபதியாக தங்கார் பொறுப்பேற்று கொண்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். 

இவர்கள் தவிர, அவையின் தலைவர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினர்களாக உள்ள சில மூத்த அமைச்சர்களுக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது. 

மேலும், இந்த கூட்டத்தில், ராஜ்யசபை தலைவரான தங்காரிடம், குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் விவகாரம் பற்றி சில எதிர்க்கட்சிகள் பேச கூடும் என்று சில  நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sub president invitation to all leaders for feast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->