சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்! - Seithipunal
Seithipunal


ஒரு சிலிண்டருக்கு 200 மானியம் ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உஜ்வாலா திட்டத்தில் ஆண்டிற்கு 12 சிலிண்டர் பெறுவோருக்கு இந்த மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 2016 மே 1-ம் தேதி நம் நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் படி, வைப்புத் தொகை உட்பட 1,600 ரூபாயை மத்திய அரசே வழங்கும். மேலும், திட்ட பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.

இப்படியாக நாடு முழுவதும் இந்த திட்டத்தின்கீழ் 9 கோடிக்கும் அதிக பயனாளர்கள் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 35 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டப் பயனாளிகள் 9.17 கோடி பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subsidy PMUY Ujjwala Cylinder CentralGovt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->