புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா : பூரி கடற்கரையில் மணற் சிற்பம்.!! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா : பூரி கடற்கரையில் மணற் சிற்பம்.!!

இன்று இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சுமார் ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து மக்களவைக்குள் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள். 
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் புதிய நாடாளுமன்ற போன்ற மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். 

இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்தும், தனது செல்போனில் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். இந்த மணற்சிற்பம் குறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "எனது நாடாளுமன்றம் எனது பெருமை'' என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார். 

மேலும், புதிய பாராளுமன்ற கட்டிடம், புதிய இந்தியாவின் சின்னம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தேசத்திற்கான உங்கள் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கு பாராட்டுக்கள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக பாராளுமன்றம் கட்டப்பட்டதை நினைத்து எங்கள் இதயம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudharsan patnayak create sand sculpture for new parliament building


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->