ரேஷன் கடைகளில் சர்க்கரை இலவசமா? - எங்கே? எப்போது? - Seithipunal
Seithipunal


ரேஷன் கடைகளில் சர்க்கரை இலவசமா? - எங்கே? எப்போது?

நாட்டின் தலைநகரான டெல்லியில் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் சமூகத்தின் மிகவும் விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்திற்கு மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இனி தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்கப்படும். பயனாளி குடும்பங்களுக்கு தற்போதுள்ள கோதுமை மற்றும் அரிசியுடன் சேர்த்து இலவச சர்க்கரையும் கிடைக்கும்.

இதன்மூலம் டெல்லியில் உள்ள 68,747 தேசிய உணவுப் பாதுகாப்பு அட்டைதாரர்கள் மற்றும் மொத்தம் 2,80,290 தனிநபர்கள் பயனடைவார்கள். இந்த முயற்சிக்கான நிதி ஒதுக்கீடு ரூ.111 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச சர்க்கரை வழங்கப்படும். இந்த சலுகை ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sugar free at ration shop in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->