ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு! அறிக்கை வெளியிட்ட தேசிய புலனாய்வு அமைப்பு! - Seithipunal
Seithipunal


15 மாநிலங்களில் 106 பேர் நேற்று கைது!

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு டெல்லியை தலையிடமா கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டில் பயங்கரவா தாக்குதல் நடத்த திட்டம் பயங்கரவாத செயலுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி என பல்வேறு புகார்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது  எழுந்த நிலையில், தேசிய புலனாய் அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை உட்பட பல்வேறு அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 

2020 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது டெல்லியில் நடந்த கலவரம் மற்றும் ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை எதிரான நடத்தப்பட்ட போராட்டம் என பல சம்பவங்களுக்கு இந்த அமைப்பு நிதி உதவி அளித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதனிடையே நேற்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களை தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் மாநில போலீசார் பாதுகாப்புடன் தமிழ்நாடு உட்பட நாட்டின் 15 மாநிலங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முடிவில் ஆயுதங்கள், பணம்,சர்ச்சைக்குரிய ஆவணங்கள், செல்போன், லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும் இச்சோதனையை முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சார்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டு, இந்த அமைப்பை செயல்பட்டு வந்த பல்வேறு அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனை தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் "பிற மதம் சார்ந்த அமைப்புகளுடன் தொடர்பு உடைய நபர்களை கொலை செய்வது, கல்லூரி பேராசரின் கையை வெட்டியது போன்ற வன்முறை செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. பிரபல நபர்கள் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு, பொது சொத்துக்களை அழித்தல் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு மக்கள் மனதை அச்சத்தை உருவாக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டுள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Support the IS terrorist movement The National Intelligence Service published a report


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->