#BREAKING :: சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு..!! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


மத்திய சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் சார்பில் 2022-2023 கல்வி ஆண்டில் மொத்தமுள்ள 100 சதவிகித இடங்களுக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி படிப்பு கலந்தாய்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அரசு மருத்துவர் ஸ்ரீஹரி பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்தும், 2020ம் ஆண்டு பிறப்பித்த தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் 50% இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 50% இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் "2021-2022ம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 2022-2023ம் கல்வியாண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை" என மத்திய அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நடப்பு கல்வியாண்டுக்கு பொருந்துமா என்பதை உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அல்லது மனுதாரர் தரப்பு விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்வழக்கை முடித்து வைத்தார். 

இந்த நிலையில் கார்த்திகேயன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நடப்பாண்டில் (2022-2023) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் 15 நாட்களில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இடங்களை நிரப்ப வேண்டும். மீதமுள்ள இடங்கள் குறித்தான விவரங்களை 16வது நாள் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு உறுதியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court approved 50% reservation for govt doctors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->