பாலியல் வழக்கில் ஜாதக பொருத்தம் கேட்ட உயர் நீதிமன்றம்..!! சாட்டை சுழற்றிய உச்ச நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள அலகாபாத் பல்கலை கழக பேராசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக கூறி பெண் ஒருவருடன் நெருங்கி பழகிய பிறகு திருமணம் செய்து கொள்ள மறுத்துளார். இது குறித்து பேராசிரியர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்த போலீசார் பேராசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேராசிரியர் மீதான இந்த பாலியல் வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் பெண்ணை காதலித்தது உண்மை தான், ஆனால் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் குடும்பத்திற்கு அழிவு ஏற்படும் என்ற அச்சத்தால் திருமண செய்து கொள்ள மறுத்ததாக கூறியுள்ளார்.

பேராசிரியரின் விளக்கத்தை கேட்ட அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு உண்மையில் தோஷம் இருக்கிறதா? என்பதைக் கண்டறிந்து ஒரு வாரத்தில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையைத் தாக்கல் செய்ய லக்னோ பல்கலைக்கழக ஜோதிடத் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பேராசிரியர் மீதான பாலியல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேரடியாகத் தலையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய உச்ச நீதிமன்ற இரு நபர் அமர்வு வழக்கை மீண்டும் விசாரித்தது. இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் கவலையளிக்கிறது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய்குமார் சிங் திருமணம் செய்து கொள்ள ஜாதகம் காரணம் என்று கூறியதால் இருதரப்பு ஒப்புதலின் பேரிலேயே அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தாக தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் ஜாதகம் பார்ப்பது எல்லாம் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. 

இந்த வழக்கில் ஜாதகத்தைப் பார்த்து எதற்காக அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னார்கள் என்று புரியவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஜாதக சமர்ப்பிப்பு உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court bans High Court order asking for horoscope in sex case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->