கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


ஒரு மாநிலத்தில் எடுக்கப்படும் கனிம வளங்களுக்கு, வரி விதிக்க அம்மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக, மத்திய அரசும் - சுரங்க நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் எட்டு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பின்படி, சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் ஆகிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் 1957 சட்டம் வரையறுக்கவில்லை. 

இந்திய அரசியலமைப்பின் 246 வது பிரிவின் கீழ், மாநில சட்டமன்றங்களில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளன. 

இந்த சட்டத்தின் மூலம் மாநில அரசுகள் தங்கள் வரம்புக்கு வரக்கூடிய சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது. 

மேலும் சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி கிடையாது. அது குத்தகை பணம் மட்டும்தான்" என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி பிவி நாகரத்தினம் , சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பே இந்த வழக்கின் இறுதி தீர்ப்பாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Judgement for State Tax


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->