பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு - அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும், பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள், சரியானதா என்பது குறித்தும் விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி மத்திய அரசு, 500 மற்றும் 1000 நோட்டுகளின் டெண்டரை ரத்து செய்தது. அதன்படி நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த உத்தரவின் மூலம், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court order for Demonetization


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->