ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் பொருட்கள்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
supreme court order for sex workers ration card
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், பி ஆர் கவாய், பி வி நாகரத்தினா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில், பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் தொழிலை கடந்து அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்க மாநில அரசுகள், மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், பாலியல் தொழிலுக்கு 4 வாரங்களுக்குள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை வாங்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
supreme court order for sex workers ration card