டெல்லியின் குடிநீர் பிரச்சினை - இமாச்சல் அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதையடுத்து கடந்த வாரம் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு உத்திரபிரதேசம், இமாச்சல் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து கூடுதல் நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் உத்திரபிரதேச மற்றும் ஹரியானா மாநில அரசுகளிடம் டெல்லியின் பாஜக தலைவர்கள் தலையிட்டு பேசி குடிநீர் பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் குடிநீர்த்த தட்டுப்பாட்டை போக்க சில அவசர நடவடிக்கைகளையும் கெஜ்ரிவால் முன்னெடுத்து இருந்தார்.

இந்நிலையில் தான் உச்ச நீதிமன்றம் கூடுதல் உபரி நீரை இமாச்சல் அரசு திறந்து விட வேண்டும் எனவும், அதனை வாஜிராபாத் அணை வழியாக ஹரியானா மாநிலம் திறந்து விட வேண்டும் எனவும், மேலும் நீர் திறந்து விடுவது குறித்து ஹரியானா அரசிடம் இமாச்சல் மாநில அரசு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வாஜிராபாத் அணை வழியாக இமாச்சல் அரசு திறந்து விடும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான வசதிகளை ஹரியானா அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் இப்படி இரு மாநிலங்கள் மூலம் பெறுகின்ற இந்த கூடுதல் உபரி நீரை டெல்லி வீணாக்காமல் உபயோகப்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Ordered On Delhi Water Crisis


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->