வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு உத்தரவு!
surrogate mother rules change
கணவன்-மனைவி இருவரில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பெற முடியாத குறைபாடு இருந்தால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சட்டம் நடைமுறையில் உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள வாடகை தாய் விதிமுறைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு, இதில் திருத்தம் கொண்டு புதிய விதிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், வாடகை தாய் மூலம் பிறக்க போகும் குழந்தை தந்தையின் உயிரணுவோ அல்லது தாயின் கருமுட்டையையோ கொண்டிருக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி அளிக்கப்படும்.
கணவன்-மனைவி இருவருக்கும் குழந்தை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியாது. யாரேனும் ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருந்தால் மட்டுமே இந்த முறையை பயன்படுத்த முடியும்.
இது தொடர்பாக மாவட்ட மருத்துவ வாரியம் சான்று அளிக்க வேண்டும். அதன் பிறகு தான் உயிரணு அல்லது கருமுட்டை தானமாக பெற முடியும்.
ஒரு பெண் விவாகரத்து ஆனவராகவோ அல்லது விதவையாகவோ இருந்தால் அவரது கருமுட்டையை பெறப்பட்டு வாடகை தாய் முறைக்கு செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறவியில் இருந்தே அரியவகை குறைபாடு கொண்ட ஒரு பெண், கருமுட்டையை தானமாக பெற்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து ஏராளமான பெண்களிடம் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மனு வந்த நிலையில் இந்த திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
surrogate mother rules change