தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்: காரணம் என்ன?   - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, பாகூர் தாசில்தார் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்தில் தரமற்ற மத்திய உணவு வழங்கும் அக்ஷய பாத்ரா உடன் உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் வாரத்தில் 3 நாட்கள் முட்டையுடன் கூடிய தரமான மதிய உணவு அரசு வழங்க வேண்டும். 

காலாண்டு தேர்வு முடிந்ததும் ஆசிரியர்கள் இல்லாத இடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நிரப்ப வேண்டும். அறிவித்திருந்த இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும். 

சுத்தமான கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் போன்றவை அனைத்து பள்ளிகளிலும் உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் தேசிய கல்வித் தொகையை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து தாசில்தார் அலுவலகம் முன்பு பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு மாணவர் சங்க பாகூர் இடை கமிட்டி தலைவர் தலைமை தாங்கினார். இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

தாசில்தார் அலுவலகத்தை மாணவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tahsildar office besieged Students protested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->