ரயில் பெட்டிகளை எண்ணிய தமிழக இளைஞர்கள்..!! அரசு வேலைக்காக ரூ.2.5 கோடி இழந்தது அம்பலம்..!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமி என்பவர் டெல்லி காவல் நிலையத்தில் வேலை மோசடி தொடர்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் "தமிழகத்தைச் சேர்ந்த எம்பி ஒருவரின் அலுவலகத்தில் கோவையைச் சேர்ந்த சிவராமன் என்பவரை சந்தித்தேன். அவர் தனக்கு எம்பி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருடன் நெருக்கமான பழக்கம் உள்ளதால் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களை டெல்லியில் உள்ள ரயில்வே அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சிவராமன் சிலரிடம் அறிமுகம் செய்தார். டெல்லி சென்ற இளைஞர்களிடம் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர், அரசு அலுவலகத்தில் கிளர்க் வேலையில் சேர்ப்பதாக சிவராமன் உறுதியளித்து அவர்களிடமிருந்து பணம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ரயில்வே வேலையில் சேர்வதற்கான போலி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டையை சிவராமன் வழங்கியுள்ளார். இதற்கிடையே வேலையில் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஊரில் உள்ள பலரிடம் இதைப் பற்றி கூறியுள்ளனர். இதனை அறிந்த மதுரையை சேர்ந்த 25 இளைஞர்கள் புது டெல்லிக்கு சென்று உள்ளனர்.

இதேபோன்று போலி நியமன ஆணைகளை வழங்கிய சிவராமன் அவர்களிடமிருந்து 2 முதல் 24 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். முதல் கட்ட பணி பயிற்சி என கூறி டெல்லி ரயில் நிலையத்தில் தினமும் 8 மணி நேரம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களையும், ரயில் பெட்டிகளையும் கணக்கெடுக்கும்படி கூறியுள்ளார். இதனை நம்பி தமிழக இளைஞர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை செய்து வந்துள்ளனர்.

இதன் பிறகு சிவராமன் திடீரென தலைமறைவாகியுள்ளார். ஒரு மாதம் பயிற்சிக்குப் பின்னர் தங்களுக்கு எங்கு, என்ன வேலை என தமிழக இளைஞர்கள் ரயில்வே அதிகாரியிடம் விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சுப்புசாமியை தொடர்பு கொண்ட இளைஞர்கள் முழு விவரத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சுப்புசாமியும் பாதிக்கப்பட்ட தமிழக இளைஞர்களும் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சிவராமனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu youths lost money for Railway jobs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->