அதானியை முந்திய தமிழன் ஷிவ் நாடார்! எந்த பட்டியலில் தெரியுமா?
Tamilan Shiv Nadar ahead of Adani in donors list
இந்தியாவில் மிகப் பெரும் அளவில் நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியலில் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்று எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2022ல் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஹுருன் இந்தியா என்ற நிறுவனம் எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் என்ற அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2022 -ம் ஆண்டு நன்கொடையாளர்கள் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்த ஆண்டு நன்கொடையாளர் பட்டியலில் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.1,161 கோடி நன்கொடை வழங்கி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் இடம் வகித்து வந்த 'விப்ரோ' நிறுவனர் அசிம் பிரேம்ஜி தற்போது ரூ.484 கோடி நன்கொடையாக வழங்கி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான கவுதம் அதானி ரூ.190 கோடி நன்கொடையாக வழங்கி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ரூ.100 கோடி, ரூ.50 கோடி மற்றும் ரூ.20 கோடிக்கு அதிகமாக முறையே 43 பேர் நன்கொடை வழங்கி உள்ளனர். இந்த ஆண்டு பட்டியலில் ஆறு பெண் நன்கொடையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த வருடம் நன்கொடை தொகை அதிகரித்திருந்தாலும், நன்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து மூன்றாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamilan Shiv Nadar ahead of Adani in donors list