அரசின் திட்டங்களை பெற ஆதார் கட்டாயம்.. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி சமூகநலத்துறை செயலாளர் உதயகுமார் அனைத்து துறை செயலாளர்களுக்கும் துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் "அரசின் சேவைகள் பலன்கள் மற்றும் மானியங்கள் வழங்குவதற்கான அடையாளமாக ஆதாரை பயன்படுத்துவது அரசு விநியோக செயல்பாடுகளை எளிதாக்குகிறது. 

இந்த நடைமுறை மூலம் வெளிப்படத் தன்மை மற்றும் செயல் திறனை கொண்டு வருகிறது. மேலும் பயனாளர்கள் தங்கள் உரிமைகளை வசதியாகவும் தடையின்றி நேரடியாகவும் பெற முடிகிறது. சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 13 முக்கிய திட்டங்களான மாற்று திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையான திருமணத்திற்கான உதவி தொகை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை வழங்குதல்.

மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குதல், கண் தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை பெறுவோருக்கு இனி ஆதாரம் கட்டாயம் தேவை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். 

இந்த திட்டங்கள் மூலம் புதுச்சேரி நிதி மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் செயல்படுத்தப்படுகிறது என்பதால் இத்திட்டங்களில் பயன்பெறுவோர் மற்றும் திட்டங்களை பெற தகுதியுடையோர் ஆதார் எண் ஆதாரமாக அளிப்பது அவசியம். மேலும் திட்டங்களின் பலன் கிடைக்க ஆதார் அட்டை இல்லாதோர் முன்னதாகவே விண்ணப்பித்து பெறுவதற்கு அவசியம். இந்த விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது" என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai order aadhar is mandatory to get govt schemes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->