உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்து.. அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்த தமிழிசை சௌந்தரராஜன்.!  - Seithipunal
Seithipunal


ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் அருகே உள்ள குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கருட் சட்டி பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாகவும், ஏழு பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதற்கான விசாரணை விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி வரை மோசமான வானிலையின் காரணமாக கூட இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த 7 பேரில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இதுபற்றி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை “உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் அருகே  நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவர்களின்  குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட வேண்டுமென்று அம்மாநில அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisia about Uttarkant Helicopter accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->