சாலை விபத்தில் முதலிடம் - எந்த மாநிலம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.61 லட்சமாக உயர்ந்துள்ளது. சாலை விபத்துகளில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நாட்டில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 1,68,491 பேர்  பலியானதுடன் 4,43,366 நபர்களுக்கு காயமடைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட விபத்துகளில் 11.9 சதவீதம், இறப்புகளில் 9.4 சதவீதம் மற்றும் காயங்களில் 15.3 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. 

அபாயகரமான சாலை விபத்தில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோரில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மணி நேரமும் இந்திய சாலைகளில் 53 விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்து காரணமாக மணிக்கு 19 உயிரிழப்புகள் பதிவாகின்றன

சாலை விபத்துக்களில் ஈடுபட்டுள்ள வாகன வகைகளில், 2022-ம் ஆண்டின் மொத்த விபத்துக்கள் மற்றும் இறப்புகளில், இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெரும் பங்கைக் கொண்டுள்ளன. கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu first place of road accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->