பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை ரவுண்டு கட்டி அடித்த பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை ரவுண்டு கட்டி அடித்த பெற்றோர்.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவிகளை ஆசிரியர் மிரட்டி வந்துள்ளார். இருப்பினும் ஒரு கட்டத்தில் ஆசிரியரின் தொல்லைத் தாங்க முடியாமல் மாணவிகள் சம்பவம் குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளனர்.

இதைகேட்டு கடும் கோபமடைந்த பெற்றோர்கள், பள்ளிக்கு நேரடியாக சென்று ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்து அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested for sexuall harassment in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->