2 குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியை தற்கொலை! பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, பஞ்சாரா பகுதியைச் சேர்ந்தவர் மெனரிகா. இவரது மனைவி ஜோதி (வயது 32) இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இவர்களுக்கு அர்ஜுன் (வயது 4), ஆதித்யா (வயது 2) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். கணவன்-மனைவியிடையே தொடர்ந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் ஆசிரியர் ஜோதி மனவேதனையுடன் இருந்துள்ளார். 

இந்நிலையில் ஜோதி நேற்று காலை 2 மகன்களுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தார். அதனை குடித்த குழந்தைகள் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

இதனை பார்த்து கதறி துடித்த ஜோதி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் ஜோதி மற்றும் குழந்தைகள் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதி மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher commits suicide after killing 2 children


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->