மக்களே உஷார்! வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் வைத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் நாயை குளிப்பாட்ட ஹீட்டரில் வெந்நீர் வைத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்பம் நகரை சேர்ந்தவர் மகேஷ் பாபு. இவர் வீட்டில் நாய் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டர் கம்பியை பயன்படுத்தி வெந்நீர் வைத்துள்ளார்.

அதன் பின்னர் தண்ணி சூடாகி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு திடீரென செல்போன் கால் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வாட்டர் ஹீட்டர் கம்பியை தவறுதலாக தனது கைக்குள் அடியில் வைத்துள்ளார்.

இதனால் மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி துர்கா கணவரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில்  மகேஷ்பாவை சோதனை செய்த மருதுவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அடைத்து அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் நாயை குளிப்பாட்டுறதற்காக வாட்டர் ஹீட்டர் தண்ணீர் வைத்த நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager who put hot water in a water heater was electrocuted and died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->