தெலங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்க பாதை: உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்!
Telanagana Surangam Accident
தெலங்கானா மாநிலம், ஸ்ரீசைலம் அணையில் கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட விபத்தில், சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததால் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் நேர்ந்த போது, சுரங்கத்திற்குள் சுமார் 50 பேர் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 43 பேர் பாதுகாப்பாக வெளியே வந்த நிலையில், மீதமுள்ள 7 பேர் நிலை குறித்து உறுதி செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதையின் ஒரு பகுதி 10 மீட்டருக்கும் மேல் இடிந்து விழுந்துள்ளதாகவும், அந்த இடத்தில் 200 மீட்டருக்கு மேல் சேறு தேங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல்புறம் 3 மீட்டர் உயரத்திற்கு திடீரென இடிந்து விழுந்ததால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பலர் தப்பித்து வெளியேறியுள்ளனர்.
இருப்பினும், சுரங்கத்தின் ஒரு பகுதியிலேயே சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீட்புக்குழுக்கள் முழு முயற்சியுடன் ஈடுபட்டு, சிறந்த முறையில் மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
English Summary
Telanagana Surangam Accident