செம்மர மோசடி விவகாரம்... வசமாக சிக்கிய அரசு அதிகாரிகள்! தெலுங்கானாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் செம்மரம் மற்றும் மீன்பிடி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில முதல்வர் உத்தரவிட்டிருந்தார். 

இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில் தெலுங்கானா கால்நடை மேம்பாட்டு முகமை தலைமை நிர்வாக அதிகாரி சபாவத் ராம்சந்தர் மற்றும் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் ஆகியோர் அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் அரசு விதிகளை மீறி செம்மர கொள்முதலில் தனியார் நபர்களை ஈடுபடுத்தி மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் ஊழலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 8 அரசு அதிகாரிகளை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana sheep caught fraud Government officials arrested


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->