தெலுங்கானா | கோவில் திருவிழாவில் நேர்ந்த விபரீதம்: 3 பேர் பரிதாப பலி.!
Telangana temple festival electric shock 3killed
தெலுங்கானா, வாரங்கல் பர்வத கிரி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறஇருந்தது. இதற்காக கோவில் வளாகம் முழுவதும் அலங்காரம் மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த பணியில் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன், ரவி, அனில் உளிபட 4 பேர் ஈடுபட்டிருந்தனர். நான்கு பேரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதில் தேவேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மற்ற மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரவி மற்றும் அனில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்ததால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Telangana temple festival electric shock 3killed