தெலுங்கானா | 10 நாட்களுக்கு திரையரங்குகள் மூடல்! வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் கோடை விடுமுறையில் லாபத்தை அள்ளித் தரக்கூடிய சினிமா படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் ஆந்திராவில் நடந்த பொதுத் தேர்தல் ஆகியவற்றின் தாக்கத்தால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவதை தவிர்த்துள்ளனர். 

இதனால் சினிமா பார்க்க ஆளில்லாமல் திரையரங்குகள் வெறிச்சோடி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் வெற்றியை தர தவறிவிட்டனர். 

மேலும் தேர்தல் காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒற்றை திரை கொண்ட திரையரங்குகள் 10 நாட்கள் மூடப்படுகிறது. 

அதன்படி 14ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திரையரங்குகள் தொடர்ந்து மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு திரைகளுக்கு மேல் உள்ள திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Theaters closed 10 days


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->