அதிகாலையில் சோகம் - தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ சில நிமிடங்களிலேயே மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வேகமாக தீயை அணைக்க முயன்றனர். இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி பலியாகியிருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்டோரை சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே போலீசார் மருத்துவமனையில் எவ்வாறு தீ பற்றியது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten childrens died for fire accident in uttar pradesh jansi hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->