பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!....உரிமையாளரால் 3 பேர் பலியான சோகம்! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் உள்ள சிரோலி என்ற கிராம பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது.

இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அப்போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து திடீரென வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தனர்.  

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து, இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நசீர் என்பவர் பெயரில் பட்டாசு ஆலை இயங்கி  வந்ததும், இவர் ஆலை அமைக்க அங்கீகாரம் பெற்ற இடத்தில் பட்டாசு ஆலை அமைக்காமல் உறவினர் வீட்டில் பட்டாசு ஆலையை நடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible explosion in a firecracker factory tragedy 3 people were killed by the owner


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->