இந்தியாவில் பயங்கரவாதம்!...ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஹிஸ்ப் உத் தஹிரிர்  அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், பயங்கரவாத அமைப்புகளில் சேர ஏமாந்த இளைஞர்களை தீவிரமயமாக்குவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு சமாளித்து பாரதத்தை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பல்வேறு உலக நாடுகள் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்திருந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorism in india central government action order to ban hizbud tahirir organization


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->