கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து!...ஒரே நேரத்தில் நண்பர்கள் 3 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே, இருசக்கர வாகனம் மீது  கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே நண்பர்களான விஜி, வசந்தகுமார், ராகுல் ஆகிய 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று வந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து  இருசக்கர வாகனத்தில் விஜி, வசந்தகுமார், ராகுல் ஆகிய  3 பேர் சென்ற நிலையில், கண்டெய்னர் லாரி மோதியுள்ளது. இந்த கோர விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகனம் மீது  கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், நண்பர்கள்  3 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது போன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident near krishnagiri tragedy 3 friends died at the same time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->