ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளின் முக்கிய பதுங்கு குழி அழிப்பு.! ஆயுதங்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதியின் முக்கிய பதுங்கு குழி அழிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் மர்வாவின் தொலைவில் உள்ள சர்குண்டு-நவபாச்சி பகுதியில் ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது பயங்கரவாதிகளின் மறைவிட பதுங்கு குழியை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர் வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றினர். 

இதில் 2 கைக்குண்டுகள், ஒரு டெட்டனேட்டர், ஒரு பாதுகாப்பு உருகி, 109 குண்டுகள் கொண்ட ஏகே தாக்குதல் துப்பாக்கியின் இரண்டு மகசீன்கள், 56 பொது பயன்பாட்டு இயந்திர துப்பாக்கி ஆகியவை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்தனர். மேலும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது யாரும் கைது செய்யப்படவில்லை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist Hideout Busted In Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->